வங்கதேசத்தில் பஸ் மீது குண்டு வீச்சு : 7 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது
வங்கதேசத்தில் எதிர்க்கட்சிகளால் நடத்தப்படும் தேசிய மட்டத்திலான வேலைநிறுத்தத்தின் மூன்றாவது நாளில் பஸ் ஒன்றின் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதலில் 7 பேர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் குறைந்தது 16 பேராவது எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கடற்கரையோர நகரான கொக்ஸ் பஸாரில் இருந்து தலைநகர் டாக்காவுக்கு சென்று கொண்டிருந்தபோதே இந்த பஸ்ஸின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாட்டின் போக்குவரத்து வலையமைப்பை தடுக்கக் கோரி கடந்த மாதம் எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சி விடுத்த இந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக டசின் கணக்கானோர் இதுவரை பலியாகியுள்ளனர்.
தாம் பகிஷ்கரித்த கடந்த வருடத்தின் பொதுத்தேர்தலை மீள நடத்துமாறு அந்தக் கட்சி கோருகிறது.




























