போலியோ குழுவுக்கு பாதுகாப்பு அளித்தவர் சுட்டுக் கொலை
பிரசுரிக்கப்பட்டது
பாகிஸ்தானின் மேற்குப் பகுதி நகரான குவெட்டாவில் போலியோ தடுப்பு மருந்து தரும் குழுவுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலிஸ்காரர் ஒருவரை, துப்பாக்கிதாரிகள் சுட்டுக்கொன்றிருக்கிறார்கள்.

பட மூலாதாரம், EPA
மோட்டார்பைக்கில் வந்த இரண்டு பேர், இந்த போலிஸ்காரர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த மசூதிக்கு வெளியே காத்திருந்து, அவர் பிரார்த்தனை செய்துவிட்டு வெளியே வந்ததும் அவரை சுட்டுக்கொன்றனர்.
அந்தப் பக்கம் சென்றுகொண்டிருந்து வேறொரு 16 வயது வழிப்போக்கரும் இதில் காயமடைந்தார்.
போலியோ தடுப்பு மருந்து தரும் பணிகளில் ஈடுபடுவோரை இஸ்லாமியத் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இந்த தடுப்பு மருந்து தரும் இயக்கம் , முஸ்லீம்களை மலடாக்கும் ஒரு சதி அல்லது தடுப்பு மருந்து தரும் போர்வையில் வேவு பார்க்கும் நடவடிக்கை என்று அவர்கள் கூறுகின்றனர்.




























