100 பெட்ரோலிய தாங்கிகளுடன் எரிந்த ரயில் - காணொளி

பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாநிலத்தில், 100க்கும் அதிகமான கச்சா எண்ணெய் தாங்கிகளை ஏற்றிச் சென்ற ரயில் தடம்புரண்டு எரிந்தது.

வெடிப்பு நடந்து பல மணி நேரங்கள் கடந்தும் அவை எரிந்துகொண்டிருந்தன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கிருந்து இடம்பெயரச் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மாநில தலைநகர் சார்ள்ட்டனில் இருந்து தென்கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் இது நடந்துள்ளது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.