கம்போடியாவில் அழுக்கான ஊசி மூலம் பரவிய எச்.ஐ.வி - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
அழுக்கு ஊசிகள் மூலம் ஏற்படக்கூடிய தொற்றுக்களை குறைப்பதற்கான முக்கிய முன்முயற்சி ஒன்றை உலக சுகாதார நிறுவனம் இன்று ஆரம்பித்துள்ளது.
ஒரு தடவை பயன்படுத்திய பின்னர் தானாகவே செயலிழந்துபோகும் ஊசிகளை பயன்படுத்தும் திட்டத்துக்கு இதன் மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆதரவு வழங்குகிறது. அவற்றை அடுத்த தடவை பயன்படுத்த முடியாது.
கம்போடியாவில் அழுக்கான ஊசிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதால், அங்கு பலருக்கு எச்.ஐ.வி மற்றும் ஈரல் தொற்றுநோய் ஆகியவை கணிசமாக பரவியுள்ளதாக செய்திகள் வரும் நிலையில் இந்த நகர்வு வந்திருக்கிறது.
இவை குறித்த பிபிசியின் காணொளி ஆய்வு.