தென்கொரியாவில் அமெரிக்கத் தூதர் மீது கத்திக்குத்து தாக்குதல்

பிரசுரிக்கப்பட்டது

கத்திக்குத்துக்கு உள்ளான தென்கொரியாவுக்கான அமெரிக்கத் தூதர், மருத்துவமனை சிகிச்சைக்குப் பின்னர் தான் நலமடைந்து வருவதாக கூறுகிறார்.

தூதர் மார்க் லிப்பர்ட், சோல் நகரில் கூட்டம் ஒன்றில் இருந்தபோது வடகொரியாவும் தென்கொரியாவும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கோஷிமிட்டுவந்த ஒருவர் அவரை இரண்டு தடவை கத்தியால் கிழித்துவிட்டார்.

தூதருக்கு முகத்திலும் மணிக்கட்டிலுமாக 80 தையல் போட வேண்டி வந்தது.

இக்குறிப்பில் வரும் சில காட்சிகள் உங்களுக்கு சஞ்சலத்தை தரலாம்.