மதக்குழு உறுப்பினர்கள் அங்கோலா படைகளுடன் மோதியதில் பலர் பலி

உலகம் அழியும் என்று நம்பும் மதக்குழுவினர் பலர் அங்கோலா படையினருடன் மோதலில் பலி
படக்குறிப்பு, உலகம் அழியும் என்று நம்பும் மதக்குழுவினர் பலர் அங்கோலா படையினருடன் மோதலில் பலி
பிரசுரிக்கப்பட்டது

உலகம் அழியப்போகிறது என்று நம்பும் ஆயுதந்தாங்கிய மதக்குழு ஒன்றின் உறுப்பினர்கள் பலருடன் அங்கோலா படைகள் நடத்திய மோதலில் அவ்வமைப்பின் பல உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இந்த மோதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 வரை இருக்கலாம் என்று நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான யூனிட்டா கூறுகிறது.

ஆனால் ஆளும் எம்.பி.எல்.ஏ கட்சியோ இதில் 13 பேர்தான் கொல்லபட்டனர் என்று கூறுகிறது.

“ஏழாம் நாள் உலக ஒளி” என்ற இந்தக் குழுவினைப் பின்பற்றுபவர்கள் கொல்லப்பட்டதை விசாரிக்கவேண்டும் என்று அங்கோலா அரசை யுனிட்டா வலியுறுத்துகிறது. இந்த அமைப்பு, ஏழம் நாள் அட்வெண்டிஸ்ட் என்ற கிறிஸ்தவ மதப்பிரிவின் ஒரு கிளையாகும்.

இந்தக் குழு உலகம் இந்த ஆண்டோடு முடிந்துவிடும் என்று நம்புகிறது. எனவே இந்த இயக்கத்தைப் பின்பற்றுபவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி மலைகளை நோக்கிச் செல்லவேண்டும் என்று அது கூறியிருக்கிறது.