பிரிட்டன்: பெற்றவரால் வெளிநாடு கொண்டுசெல்லப்படும் பிள்ளைகள்
பிரசுரிக்கப்பட்டது
பிரிட்டனில், பிள்ளையைப் பெற்றவர்களில் ஒருவரின் அனுமதியின்றி மற்றவரால் வெளிநாட்டுக்கு கொண்டுசெல்லப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட ஐநூறு குழந்தைகள் பெற்றவர் ஒருவருக்கு தெரியாமல் மற்றவரால் வெளிநாட்டுக்கு கொண்டுசெல்லப்பட்ட சம்பவங்கள் பற்றிய முறைப்பாடுகள் வந்துள்ளதாக பிரிட்டிஷ் அரசு கூறுகிறது.