நிலநடுக்கத்தின் தாக்கத்தை எப்படி சாமாளிக்கும் நேபாளம்?

பிரசுரிக்கப்பட்டது

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு அடுத்து என்ன எனும் கேள்விகள் எழுந்துள்ளன.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அரசு கூறினாலும், அவற்றை செய்ய அரசு சிரமப்படுகிறது என்று உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

உடனடி நிவாரண நடவடிக்கைகளை அளிக்க இந்தியா முன்வந்துள்ளது.

இந்நிலையில் இந்தப் பேரழிவின் தாக்கத்தை நேபாளம் எப்படி சமாளிக்கும் என்பது குறித்து, நேபாளத்தின் அரசியல், சமூகப் பொருளாதார விஷயங்கள் குறித்த ஆய்வுகளை செய்துள்ளவரும், தொடர்ந்து அவை குறித்து எழுதி வருபவருமான டாக்டர் ராஜாமோகன் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியை இங்கே கேட்கலாம்.