"நிவாரண நடவடிக்கைகள் கட்டுக்குள் வந்துள்ளன" - நேபாளம்

நிவாரணப் பணிகள் கட்டுக்குள் - நேபாள அரசு
படக்குறிப்பு, நிவாரணப் பணிகள் கட்டுக்குள் - நேபாள அரசு
பிரசுரிக்கப்பட்டது

பூகம்பம் தாக்கி 10 நாட்களுக்குப் பின், நேபாளத்தில் நிவாரண நடவடிக்கைகள் நிலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக நேபாள அதிகாரிகள் கூறுகிறார்கள்.

சுமார் 7,000க்கும் மேற்பட்டோர் இந்தப் பூகம்பத்தில் பலியானார்கள்.

பூகம்பத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பல பகுதிகள் இப்போது அத்தியாவசியமாகத் தேவைப்படும் உதவிகளை பெறத் தொடங்கியிருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறுகிறது.

வெளிநாடுகளின் நூற்றுக்கும் மேற்பட்ட நிவாரண குழுக்கள் நாடெங்கிலும் வேலை செய்துகொண்டிருக்கின்றன. அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் உதவிப் பொருட்கள் வழங்குவதையும், காயமடைந்தவர்களை அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபடத் தொடங்குகின்றன.

இந்த நிவாரண நடவடிக்கைகளில் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட நேபாளப் படையினரும் போலிசாரும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

மோசாமன பொதுச் சுகாதாரம் மற்றும் தங்குவதற்கு இடமில்லாத நிலை ஆகியவை வியாதிகளைப் பரவ வழிவகுக்கக்கூடும் என்று உதவிக்குழுக்கள் எச்சரித்திருக்கின்றன