தேர்தலில் வெற்றிபெற்ற அன்வர் இப்ராஹிமின் மனைவி
பிரசுரிக்கப்பட்டது
மலேசியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமின் மனைவி, தனது கணவர் சிறை செல்வதால் காலியாகும் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலி வெற்றிபெற்றுள்ளார்.

வன் அஸீஸா வன் இஸ்மாயில் அவர்களின் இந்த வெற்றி அவரது கணவர் மற்றும் அவரது எதிர்க்கட்சி கூட்டணி ஆகியவற்றுக்கான ஆதரவாக பார்க்கப்படுகின்றது.
ஒரு பாலுறவுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட அன்வர் இப்ராஹிமுக்கு கடந்த பெப்ரவரியில், 5 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
தனக்கு எதிரான குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அவர் தெரிவித்திருந்தார்.
மூன்று கட்சிகளை கொண்ட கூட்டணியான மலேசிய எதிர்க்கட்சியின், முன்னாள் தலைவர் சிறையில் இருக்கும் நிலையில், அந்தக் கட்சியை யார் வழிநடத்துவார்கள் என்பது தெரியவில்லை.




























