இந்தோனேஷியா: அரசியல் கைதிகள் 5 பேரை அதிபர் விடுவித்தார்

அதிபர் ஜோக்கோ விடோடோ
படக்குறிப்பு, அதிபர் ஜோக்கோ விடோடோ
பிரசுரிக்கப்பட்டது

இந்தோனேஷியாவில் நீண்டகாலமாக பிரிவினைப் போராட்டம் நடந்துவருகின்ற பப்புவா மாகாணத்தைச் சேர்ந்த ஐந்து அரசியல் கைதிகளை அதிபர் ஜோக்கோ விடோடோ விடுதலை செய்துள்ளார்.

பப்புவா மாகாணத்தில் மோதலை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் முதற்கட்டமாக ஐந்துபேருக்கும் மன்னிப்பு அளிப்பதாக அங்கு சென்றிருந்த அதிபர் கூறியுள்ளார்.

பப்புவா மாகாணம் தொடர்பில் அரசு கொண்டுள்ள கடுமையான கொள்கைகளை மனித உரிமைக் குழுக்கள் விமர்சித்து வருகின்றன.

அங்கு சுதந்திரம் கோரி கொடி உயர்த்தினாலும் அரசாங்க எதிர்ப்பு பேரணிகளில் கலந்துகொண்டாலும் மக்களை சிறையில் தள்ளமுடியும் என்ற நிலைமையே நீடிக்கின்றது.