'குடியேறிகளை மியன்மார் தடுக்க வேண்டும்': மலேஷியா

பட மூலாதாரம், AFP
பிரசுரிக்கப்பட்டது
மியன்மாரிலிருந்து தங்கள் நாட்டுக்குள் குடியேறிகள் படகுகளில் வருவதை தடுக்க வேண்டும் என்று மலேஷியாவின் பிரதமர் நஜீப் ரஸாக் மியன்மாரிடம் கோரியுள்ளார்.
மியன்மாரிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள், பெரும்பாலும் ரொஹிஞ்சா முஸ்லிம்கள், படகுகளில் வெளியேறிவருகின்றனர்.
அவர்களில் பலர் தற்போது கடலில் நிர்க்கதியான நிலையில் உள்ளனர்.
குடியேறிகள் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என்று ஐநாவும் வெள்ளியன்று கோரிக்கை விடுத்திருந்தது.
மியன்மாரில் துன்புறுத்தல்களிலிருந்து தப்பிவருவதாகக் கூறுகின்ற ரொஹிஞ்சா முஸ்லிம்கள் வெளிநாடுகளில் நல்ல வாழ்க்கையை தேடிவருகின்றனர்.
ஆனால், குடியேறிகள் விவகாரம் குறித்து பேசுவதற்கு தயாரில்லை என்று மியன்மார் அரசாங்கம் கூறுகின்றது.
குடியேறிகள் விவகாரத்தை 'ரொஹிஞ்சா பிரச்சனையாக' மட்டும் பார்ப்பதற்கு மியன்மார் தயாரில்லை.




























