'சீனா தடுத்துவைத்துள்ள' திபெத்திய பிக்குவை விடுவிக்க கோரிக்கை

பட மூலாதாரம், Reuters
பிரசுரிக்கப்பட்டது
இருபது ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் திபெத்திய பிக்கு ஒருவரை விடுவிக்குமாறு நாடுகடந்து வாழும் திபெத்தியர்கள் சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆறு வயதாக இருக்கும்போது குறித்த பிக்கு காணாமல்போனார்.
தலாய் லாமாவினால் பஞ்சென் லாமா என்று பிரகடனப்படுத்தப்பட்டு மூன்று நாட்களில் குறித்த சிறுவனை திபெத்திலுள்ள சீன அதிகாரிகள் தடுத்துவைத்திருந்தனர்.
திபெத்திய பௌத்த பீடத்தில் இரண்டாவது படிநிலையிலுள்ள முக்கிய அந்தஸ்தே பஞ்சென் லாமா என்ற பட்டம்.
உலகில் நீண்டகாலம் அரசியல் கைதியாக இருப்பவர்களில் ஒருவராக இந்தப் பிக்குவை பலர் கருதுகின்றனர்.
அவரின் இருப்பிடம் குறித்த தகவல்களைக் கூற சீனா மறுத்துவருகின்றது.




























