'அரபுப் பெண்களை அதிகம் வேலையில் அமர்த்த வேண்டும்'
மத்திய கிழக்குப் பகுதியில், பல்வேறு தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளில் அரபுப் பெண்கள் அதிக அளவில் பணியமர்த்தப்பட வேண்டும் என்று வளைகுடாப் பகுதியைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர் ஒருவர் கோரியுள்ளார்.

பட மூலாதாரம், AFP
ஜோர்டானில் நடக்கும் பிராந்திய பொருளாதார பேச்சுக்களின் இணைத் தலைவரான ஒமர் அல்கானிம் என்ற அந்த தொழிலதிபர், பெண்கள் அதிக அளவு வேலைகளுக்கு வருவது மிகவும் முக்கியம் என்று வாதிட்டார்.
மத்திய கிழக்கில் வேலையில் இருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான இடைவெளி குறுகினால் அதிக அளவு பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
அதேநேரத்தில் பெண்கள் வேலை செய்வதில் இருக்கும் கலாச்சாரத் தடைகள் குறித்தும் அதை எப்படி எதிர்கொள்ளலாம் என்பது குறித்தும் ஒமர் அல்கானிம் ஏதும் சொல்லவில்லை.
மத்திய கிழக்கில் மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் பெண்கள் இருந்தாலும், அதிக வேலைகள் உள்ள மற்ற பல துறைகளில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.




























