புருண்டி: எதிரணித் தலைவர் சுட்டுக்கொலை, பேச்சுவார்த்தை பாதிப்பு

புருண்டி பிரச்சனை தொடர்பில் ஐநாவின் பங்களிப்புடன் பேச்சுவார்த்தைகள் ஏற்பாடாகியிருந்தன
படக்குறிப்பு, புருண்டி பிரச்சனை தொடர்பில் ஐநாவின் பங்களிப்புடன் பேச்சுவார்த்தைகள் ஏற்பாடாகியிருந்தன
பிரசுரிக்கப்பட்டது

புருண்டியில் சிறிய எதிர்க்கட்சி ஒன்றின் தலைவர் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்திக் கொண்டுள்ளதாக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

ஸெடி ஃபெருஸி-யின் உடல் தலைநகர் புஜும்புராவில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

மூன்றாவது தவணையும் ஆட்சியிலிருக்கும் நோக்குடன் தேர்தலில் போட்டியிடவுள்ள அதிபர் பியர் குருண்ஸிஸாவுக்கு எதிரான பிரசாரங்களை ஸெடி ஃபெருஸி முன்னெடுத்திருந்தார்.

புருண்டியின் பிரச்சனைகள் தொடர்பில் அரசாங்கத்துக்கும் அரசியல்கட்சிகளுக்கும் சிவில் அமைப்புகளுக்கும் இடையே ஐநாவும் ஆப்பிரிக்க யூனியனும் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்துவருவதாக கருதப்படுகின்றது.

அதிபர் குருண்ஸிஸாவின் முடிவுக்கு எதிராக பலவாரங்களாக நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து, அவருக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி ஒன்றும் தோல்வியில் முடிந்தது.

புருண்டியிலிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.