வறிய நாடுகளுக்கான உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும்
பிரசுரிக்கப்பட்டது
உலகின் மிகவும் வறிய நாடுகளுக்கான சர்வதேச உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான செயற்பாட்டுக்குழுக்களில் ஒன்றான ''வண்'' அமைப்பு கோரியுள்ளது.

பட மூலாதாரம், AP
மிகவும் குறைவாக வளர்ச்சியடைந்த நாடுகளுக்கான உதவிகள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், அது அதிகரிக்கப்படாமல், 2030இல் கடுமையான வறுமையை ஒழிப்பதற்கான புதிய உலக இலக்கை எட்டமுடியாது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்த இலக்குகள் ஐநாவால், வரும் செப்டம்பரில் இணக்கம் காணப்படவுள்ளன. ஆனால், உதவிக்கான நல்ல இலக்கு மற்றும் சமூக சேவைகளில் வளரும் நாடுகள் மேலும் முதலீடு செய்தல் ஆகியவை இல்லாமல், இவற்றை அடைய முடியாது என்று அந்த அமைப்பு கூறுகிறது.




























