'ஃபிஃபாவுக்குள் சீர்திருத்தங்கள் தேவை': வலுக்கும் கோரிக்கைகள்

ஐந்தாவது தடவையாக தலைவராக அண்மையில் தெரிவான செப் பிளாட்டர் பதவி விலகுகிறார்
படக்குறிப்பு, ஐந்தாவது தடவையாக தலைவராக அண்மையில் தெரிவான செப் பிளாட்டர் பதவி விலகுகிறார்
பிரசுரிக்கப்பட்டது

உலகளாவிய கால்பந்து விளையாட்டை நிர்வகிக்கும் ஃபிஃபா அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து செப் பிளாட்டர் விலகும் நிலையில், அந்த அமைப்புக்குள் பெரும் சீர்திருத்தங்கள் அவசியம் என்று கோரிக்கைகள் வலுக்கின்றன.

ஃபிஃபா புதிய சகாப்தத்தின் விடியலில் நிற்பதாகக் கருதலாம் என்று ஆஸ்திரேலிய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஃபிரான்க் லோவ்லி கூறியுள்ளார்.

அண்மைய ஊழல் குற்றச்சாட்டுக்களே, செப் பிளாட்டர் பதவி விலகக் காரணம் என்று வெளியாகியுள்ள செய்திகளை அவரது மகள் மறுத்துள்ளார்.

அந்தக் குற்றச்சாட்டுக்களை செப் பிளாட்டரும் மறுத்திருந்தார்.

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவினால் பிளாட்டர் விசாரிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே அவரது மகளின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

பிளாட்டரின் பதவி விலகலை வரவேற்றுள்ள, கால்பந்து விளையாட்டு அனுசரணை நிறுவனங்களான வீசா, மெக் டொனால்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் வரிசையில் தென்கொரியாவின் ஹையுண்டாய் கார் நிறுவனமும் இணைந்து கொண்டுள்ளது.