ரஷ்யா 'அறிவுப் பெயர்ச்சி' ஆபத்தை நோக்கிச் செல்கிறதா?

பிரசுரிக்கப்பட்டது

யுக்ரேன் தொடர்பான குழப்பங்கள் அதிகரிக்க, மேற்குலகின் தடைகளும் தீவிரமாகும் நிலையில், ரஷ்யாவின் படித்த, நடுத்தர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புகிறார்கள்.

2013-ம் ஆண்டில், ரஷ்யாவை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை 40 வீதம் அதிகரித்துள்ளது.

பொருளாதார நிபுணர்கள், விஞ்ஞானிகள், ஊடகவியலாளர்கள், தொழிநுட்ப நிபுணர்கள் என்று பலதரப்பட்ட துறைசார் நிபுணர்களும் இவர்களில் உள்ளனர்.