சீனா: படகு மூழ்கி பலியானவர்களுக்கு நினைவஞ்சலி நிகழ்வுகள்

பட மூலாதாரம், REUTERS
பிரசுரிக்கப்பட்டது
சீனாவில் யாங்ட்ஸே நதியில் படகொன்று கவிழ்ந்து மூழ்கிய சம்பவத்தில் பலியானவர்களின் நினைவாக அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள், ஏழாவது நாளன்று யாங்ட்ஸே நதிக்கரையில் கூடி அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் 431 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
11 பேர் காணாமல்போயுள்ளதாகவும் 14 பேர் உயிர்தப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த வாரஇறுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த இந்தப் படகு புயல் ஒன்றில் சிக்கியபோது ஆற்றில் கவிழ்ந்தது.




























