சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க போலிஸ் அதிகாரி பதவி விலகினார்
அமெரிக்கவில் சமீபகாலமாக, கறுப்பின ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக காவல்துறையினர் காட்டி வரும் தொடர் கடும்போக்கினால் அங்குள்ள மக்களின் கோபம் அதிகரித்து வரும் வேளையில், டெக்ஸாஸ் மாகாணத்தில் வெள்ளையின போலிஸ் அதிகாரி ஒருவர் பதவி விலகியிருக்கிறார்.

பட மூலாதாரம், a
அந்த மாகாணத்திலுள்ள டலாஸ் நகரின் புறநகர் பகுதியில், அண்மையில் பெரும்பாலும் கருப்பின இளைஞர்கள் இருந்த ஒரு குழுவை அவர் மோசமாக நடத்தினார் எனக் காட்டும் கானொளிகள் இணையதளங்களில் வலம் வந்த்தை அடுத்து அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
எரிக் கேஸ்போல்ட் எனும் அந்த அதிகாரி 15 வயது கருப்பினச் சிறுமியை கீழே தள்ளி அமுக்கி பிடிப்பதும், தனது துப்பாக்கியை எடுத்து சில இளைஞர்களை நோக்கி நீட்டுவதும் அந்தக் கானொளியில் தெரிந்ததை அடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
டலாஸின் புறநகர் பகுதியான மெக்கின்னியில் அமைதியின்மை ஏற்பட்ட பிறகு நிலையை சீர் செய்ய காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
அவர் பதவி நீக்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த திங்கட்கிழமை இரவு அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் ஊர்வலம் ஒன்றாகச் சென்றனர்.
இதையடுத்து எரிக் கேஸ்போல்ட் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.




























