ஃபிஃபா தலைவர் பதவிக்கு ஜீக்கோ போட்டி

பிரசுரிக்கப்பட்டது

சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான் ஃபிஃபாவின் அடுத்த தலைவர் பதவிக்கானத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பிரேசிலின் முன்னாள் வீரர் ஜீகோ உறுதிபடுத்தியுள்ளார்.

'வெள்ளை பெலே ' ஜீக்கோ உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர்
படக்குறிப்பு, 'வெள்ளை பெலே ' ஜீக்கோ உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர்

உலகளவில் கால்பந்து விளையாட்டை நெறிப்படுத்தி நடத்தும் ஃபிஃபா, ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஐந்தாவது முறையாகத் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்ட செப் பிளாட்டர் பதவி விலகுவதாக அண்மையில் திடீரென அறிவித்தார்.

கால்பந்து நிர்வாகத்தின் மிக உயர்ந்த பதவிக்கு போட்டியிடுவது தனது கடமை என்றும், தனது அனுபவமும் அறிவும் அதற்கு பெரிதும் துணையாக இருக்குமெனவும் ஜீக்கோ கூறுகிறார்.

பிரேசில் அணியின் ஒரு முன்னணி வீரராக இருந்த அவர் பின்னர் ஜப்பானின் தேசிய அணிக்கும், வேறு பல நாடுகளில் உள்ள கால்பந்து கிளப்புகளுக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

அவர் பிரேசில் அணியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அன்புடன் 'வெள்ளைப் பெலே' என்று அழைக்கப்பட்டார்.

அதேபோல் உலகளவில் மிகச் சிறந்த கால்பந்து விரர்களில் ஒருவராகவும் ஜீக்கோ அறியப்படுகிறார்.