சீனாவின் "தீவுகளை மீட்கும் திட்டத்தால்" சர்ச்சை

பட மூலாதாரம், AP
தென் சீனக்கடல் பிரதேசத்தில் தீவுகள் மற்றும் திட்டுக்களை மீட்டெடுக்கும் தனது பணிகள் விரைவில் நிறைவுறும் என்று சீனா அறிவித்துள்ளது. இந்த தீவுகள் மற்றும் திட்டுக்கள் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பில் சர்ச்சை நீடிக்கும் நிலையில் சீனாவின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ஸ்பார்ட்லித் தீவுகளை முன்வைத்து சீனா மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையை அமெரிக்காவும் அந்த தீவுகளுக்கு உரிமை கோரும் மற்ற நாடுகளும் விமர்சித்து வருகின்றன. வியட்நாமும், பிலிப்பைன்ஸும் இந்த தீவுகளுக்கு உரிமை கோரும் நாடுகளில் அடங்கும்.
இந்த பிரதேசத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் தேவைக்காகவே அங்கே தான் கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வருவதாக சீனா தெரிவித்துள்ளது. மேலும் கடல் ஆராய்ச்சிக்காகவும் இந்த கட்டுமானப்பணிகள் நடப்பதாக சீனா கூறுகிறது.
ஆனால் மற்றவர்களோ, சீனா அங்கே இராணுவ நிலைகளை உருவாக்கி அதன் மூலம் அந்த பிரதேசத்தின் மீதான தனது இறையாண்மை உரிமைகளை உருவாக்க விரும்புகிறது என்று அஞ்சுகிறார்கள்.




























