துப்பாக்கிச் சூடு நடந்த தேவாலயம் மீண்டும் வழிபாட்டிற்காகத் திறக்கப்படுகிறது
தெற்குக் கரோலினாவில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட ஆப்பிரிக்க - அமெரிக்கத் தேவாலயம் ஞாயிற்றுக்கிழமையன்று வழிபாட்டிற்காகத் திறக்கப்படுகிறது.

பட மூலாதாரம், getty
9 மணியளவில் நடக்கும் அந்த வழிபாட்டில் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக் கிழமை முழுக்க தேவாலயம் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Reuters
இதற்கிடையில், கொல்லப்பட்ட 9 பேரை நினைவுகூறும் விதமான நிகழ்வுகள் அமெரிக்கா முழுவதும் நடக்கவிருக்கின்றன.
தெற்கு கரோலினாவில் இருக்கும் பத்துக்கும் மேற்பட்ட தேவாலயங்களின் மணிகள் ஒரே நேரத்தில் ஒலிப்பதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கிறது.
மனிதச் சங்கிலி நிகழ்வு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருக்கும் 21 வயதான டைலான் ரூஃப் இணையப் பதிவுகளை எஃப்பிஐ தற்போது ஆராய்ந்து வருகிறது.
2000 வார்த்தைகளைக் கொண்ட அந்தப் பதிவு முழுக்க முழுக்க இனவெறியுடன் எழுதப்பட்டிருக்கிறது.
டைலர் ரூஃப்தான் அதை எழுதினாரா என்பது இதுவரை தெளிவாகவில்லை.
































