'ஐஎஸ்' சமூக வலைத்தளங்களை இலக்கு வைக்கும் ஐரோப்பிய காவல்துறை

பிரசுரிக்கப்பட்டது

இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுடன் தொடர்புடைய சமூக வலைத்தள கணக்குகளை கண்டுபிடித்து முடக்குவதற்காக ஐரோப்பா மட்டத்திலான காவல்துறை பிரிவொன்று உருவாக்கப்படுகின்றது.

ஐஎஸ்-டன் தொடர்புடைய குறைந்தது நாற்பத்தி ஆறாயிரம் டுவிட்டர் கணக்குகள் உள்ளதாக அமெரிக்க ஆய்வொன்று அண்மையில் கண்டறிந்தது. இவற்றில் பெரும்பாலானவை இயக்கத்துக்கு ஆள்சேர்க்க உதவுகின்றன.

ஐரோப்பிய காவல்துறையின் சிறப்பு பிரிவு அடுத்த மாதம் முதல் இயங்கத் தொடங்குகிறது.