ஊபர் வாடகைக் கார் சேவைக்கு எதிராக பிரான்சில் வன்முறை ஆர்ப்பாட்டம்

பிரசுரிக்கப்பட்டது

பிரான்சில் நாடெங்கிலுமாக வாடகைக் கார் ஓட்டுநர்கள் ஆயிரக்கணக்கானோர் வன்முறைமிக்க ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருப்பதை, நாட்டின் அதிபர் ஃபிரான்சுவா ஒல்லாந்த் கண்டித்துள்ளார். இணையவழி வாடகைக் கார் பதிவு சேவையான ஊபர், வேகமாக வளர்ந்துவருவதால் ஆத்திரமடைந்து அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை செய்திருந்தனர்.