லண்டன் தாக்குதல்களின் பத்தாவது நினைவுநாள் நிகழ்வுகள்

பிரசுரிக்கப்பட்டது

லண்டன் போக்குவரத்துக் கட்டமைப்பு மீது நடந்த இஸ்லாமியவாத தாக்குதல்களில் 52 பேர் கொல்லப்பட்டதன் பத்தாவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை லண்டனில் நடைபெற்றன.

லண்டன் குண்டுவெடிப்பின் பத்தாவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் கொல்லப்பட்டவர்களுக்கு பிரிட்டிஷ் பிரதமர் தலைமையில் மலரஞ்சலி
படக்குறிப்பு, லண்டன் குண்டுவெடிப்பின் பத்தாவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் கொல்லப்பட்டவர்களுக்கு பிரிட்டிஷ் பிரதமர் தலைமையில் மலரஞ்சலி

லண்டன் ஹைட் பூங்காவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவுச்சின்னத்தில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்களில் 52 பேர் கொல்லப்பட்டனர்
படக்குறிப்பு, ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்களில் 52 பேர் கொல்லப்பட்டனர்

லண்டனின் மூன்று சுரங்க ரயில்களிலும் ஒரு பேருந்திலுமாக நான்கு குண்டுகள் முதல் கட்டமாக வெடித்த நேரத்தைக் குறிக்கும் வகையில் அதே நேரத்துக்கு இந்த மலர்வளையம் வைக்கும் நிகழ்வும் நடந்தேறியது.

இன்றையை நினைவுகூறலை ஒட்டி கேமரன் வெளியிட்டிருக்கும் தனது செய்தியில், பிரிட்டன் பயங்கரவாதத்துக்கு அடிபணியாது என்று தெரிவித்திருக்கிறார்.

லண்டன் குண்டுவெடிப்பின்போது சாமானியர்கள் செய்த உதவிகள் இன்றளவும் பேசப்படுகின்றன
படக்குறிப்பு, லண்டன் குண்டுவெடிப்பின்போது சாமானியர்கள் செய்த உதவிகள் இன்றளவும் பேசப்படுகின்றன

பிரிட்டனின் புலனாய்வு அமைப்பான M15 அமைப்பின் தலைவர் ஆண்ட்ரூ வாக்கர் இந்த நினைவு நாளையொட்டி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில் (பிரிட்டிஷ்) சமூகத்துக்கும் பாதுகாப்புக்கும் மிகப்பெரும் சவால் என்று அவர் வர்ணித்த செயல்களை தடுப்பதற்காக தமது அமைப்பினர் தினந்தோறும் செயற்படுவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இப்படியானதொரு அறிக்கையை அந்த அமைப்பின் தலைவர் வெளியிடுவது வெகு அபூர்வ நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.