நைஜீரியாவில் தாக்குதல்: 25 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது
நைஜீரியாவின் வடபகுதியில் உள்ள சாரியா நகரில் நடந்த குண்டுத் தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், kaduna govt
இந்தத் தகவலை மாகாண ஆளுனர் நஸீர் எல் ருஃப்வா தெரிவித்துள்ளார்.
மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலை போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உள்ளூராட்சிக் கட்டடம் ஒன்றில் அரச ஊழியர்களும் ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களும் அடையாள சோதனைக்காக வரிசையில் நின்றபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்தத் தாக்குதலையடுத்து, சந்தைகள், மசூதிகள், தேவாலயங்கள் பேருந்து நிலையங்கள் போன்ற அதிகம் கூட்டம் கூடும் இடங்களுக்கு வர வேண்டாம் என பொதுமக்களுக்கு கடுணா மாகாண ஆளுனர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.




























