ஐ எஸ் அமைப்பைச் சேர்ந்த இருவர் மலேஷியாவில் கைது

பட மூலாதாரம், AP
மலேஷிய காவல்துறை, தீவிரவாதக்குழுவான “இஸ்லாமிய அரசு” அமைப்பின் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை தாங்கள் கைது செய்திருப்பதாக அறிவித்துள்ளது.
இவர்கள் இருவரும் மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்தனர் என்றும் மலேஷியக் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேற்குலகைச் சேர்ந்தவர்கள் அதிகம் புழங்கும் பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் இடங்களை இவர்கள் குறிவைத்திருந்ததாக நம்பப்படுகிறது.
சிரியாவில் இருக்கும் இஸ்லாமிய அரசு அமைப்பின் மூத்த உறுப்பினர்களிடம் இருந்து இந்த இரண்டு சந்தேக நபர்கள் உத்தரவுகளைப் பெற்றிருந்ததாக, மலேஷிய காவல்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், AP
இந்த இரண்டு பேரில் ஒருவர், சென்ற ஆண்டு சிரியாவில் சணையிட்டபோது காயமேற்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்து மலேஷியாவுக்குத் திரும்பியவர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த பதினெட்டு மாதங்களில் மலேஷிய குடிமக்கள் பலர் சிரியாவுக்கு செல்ல முயன்றார்கள் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் மலேஷிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.




























