அரச செலவினங்களை 40 % அளவுக்கு குறைக்க பிரிட்டன் திட்டம்

பிரசுரிக்கப்பட்டது

அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாற்பது சதவீத அளவுக்கு செலவினங்களை குறைக்க வழிசெய்யும் நோக்கில் திட்டமிடும்படி பிரிட்டிஷ் அரசு தன் அதிகாரிகளை கேட்டுள்ளது.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரதமர் டேவிட் கேமரனுடன் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்பர்ண்
படக்குறிப்பு, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரதமர் டேவிட் கேமரனுடன் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்பர்ண்

இந்த செலவினக் குறைப்புக்கான திட்டங்கள் யதார்த்த ரீதியில் இருக்க வேண்டும் என்றும் பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளுக்கு கூறியுள்ளது.

ஒருபுறம் நாற்பது சதவீதம் அளவுக்கு செலவினங்களைக் குறைக்க திட்டங்களைத் தீட்டும்படி அதிகாரிகளுக்கு கூறியுள்ள அரசு, மாற்றுத் திட்டமாக, 25% அளவுக்கு செலவுகளைக் குறைக்கும் மற்றொரு திட்டம் ஒன்றையும் முன்வைக்குமாறு கோரியுள்ளது.

அரசின் பொதுச் செலவினங்களை 31பில்லியன் டாலர்களுக்கு அதிகமாக குறைக்கும் எண்ணத்தை நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்பர்ண் அறிவித்து அதை முன்னெடுத்து வருகிறார்.

எனினும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைக்கான செலவினங்களில் வெட்டுக்கள் இருக்காது என்றாலும் வேறு துறைகளில் செலவினக் குறைப்பு மூலம் சேமிப்புகள் ஏற்படுத்த வேண்டும் எனவும் ஆஸ்பர்ண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார்.

சொந்த நிதியாதாரங்களில் பிரிட்டன் வாழ்வது உறுதிசெய்யப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.