முற்றாக போலியோவை ஒழிக்கும் பாதையில் நைஜீரியா

பட மூலாதாரம், EPA
புதிதாக ஒருவருக்கும் போலியோ வராமல் நைஜீரியா முதல் தடவையாக ஒரு ஆண்டைக் கடந்துள்ள நிலையில், போலியோவை முற்றாக ஒழித்துவிட்ட நாடுகளின் பட்டியலில் நைஜீரியாவும் விரைவில் சேரவுள்ளது.
2012ஆம் ஆண்டு அளவுக்கு அண்மையில் பார்த்தாலும், உலகில் புதிதாக போலியோ வந்தவர்களின் எண்ணிக்கையில் பாதியளவு நைஜீரியாவில் இருந்துதான் வந்தது.
அந்த நேரம் அந்நாட்டின் சில வட மாநிலங்களில் போலியோ தடுப்பூசி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் போலியோவை ஒழிப்பது தொடர்பான முயற்சிகளுக்கு நைஜீரியாவின் சமூகத் தலைவர்கள் ஆறு ஆண்டுகளூக்கு முன்னரே ஆதரவு அளித்திருந்தனர்.
போக்கோ ஹராம் ஆயுதக்கிளர்ச்சியையும் மீறி போலியோ தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் விரிவுபடுத்தியிருந்தது.
இந்த ஆண்டில் இதுவரையில் ஆட்களுக்கு புதிதாக போலியோ வந்திருப்பதாக பதிவாகியிருப்பது பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் மட்டுமே.




























