ஊழலையும் இனப் பகையையும் கைவிடுங்கள்: கென்யர்களுக்கு ஒபாமா கோரிக்கை

பிரசுரிக்கப்பட்டது

கென்யாவில் பயணம் மேற்கொண்டுவரும் அமெரிக்க அதிபர் ஒபாமா, ஊழல் மற்றும் இனப் பகை அரசியலில் இருந்து அந்த நாடு விடுபட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேநேரம் பெரும் வளர்ச்சி காணுவதற்கான வல்லமை கென்யாவுக்கு உண்டு என அவர் குறிப்பிட்டார்.

தந்தை வழியில் கென்ய பூர்வீகம் கொண்ட ஒபாமாதான் பதவிக் காலத்தில் கென்யா வரும் முதல் அமெரிக்க அதிபர்.

வீட்டு வன்முறை, கட்டாயத் திருமணங்கள், பெண்ணுறுப்பை சிதைக்கும் வழக்கம் போன்ற பெண் பிள்ளைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது போன்ற மோசமான பாரம்பரிய வழக்கங்கள் கைவிடப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கென்யாவுக்கு அடுத்த படியாக அதிபர் ஒபாமா எத்தியோப்பியா செல்கிறார்.

அங்கு ஆப்பிரிக்க ஒன்றிய மன்றத்தில் அவர் உரையாற்றவுள்ளார்.

ஐம்பத்து நான்கு உறுப்பு நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்க ஒன்றிய மன்றத்தில் அமெரிக்க அதிபர் ஒருவர் இதற்கு முன் உரையாற்றியது இல்லை.