"பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளில் ஆயிரத்தில் ஒன்றுகூட பொலிஸில் தெரிவிக்கப்படவில்லை"

பிரசுரிக்கப்பட்டது

ஆஸ்திரேலியாவில் யஹோவாவின் சாட்சிகள் கிறிஸ்துவ திருச்சபை பிரிவுக்கு ஆயிரத்துக்கும் அதிகமான சிறார் பாலியல் துஷ்பிரயோக புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அதில் ஒன்று கூட பொலிசாரிடம் முறையிடப்படவில்லை என்றும் விசாரணை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1950களைச் சேர்ந்த இந்தப் புகார்கள் அத்திருச்சபைக்குள்ளாகவே கையாளப்பட்டிருந்தது.

குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களில் ஒரு சிலர் திருச்சபையை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தனர், ஆனால் வேறு சிலர் தொடர்ந்தும் திருச்சபையில் நீடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

ஆஸ்திரேலியாவில் மத அமைப்புகள் மதச்சார்பற்ற அமைப்புகள் போன்றவற்றில் பாலியல் துஷ்பிரயோக குற்ற்றச்சாட்டுகள் எந்த அளவுக்கு உள்ளது என்பது பற்றிய அரசாங்க விசாரணை ஒன்றில் இந்த விவரம் வெளியாகியிருந்தது.