மெர்ஸ் வைரஸ் பரவல் முடிவுக்கு வந்ததாக தென்கொரியா அறிவிப்பு
பிரசுரிக்கப்பட்டது
36 பேர் பலியாகக் காரணமாக இருந்து, பரவலான பதற்றத்தை கிளறிய மெர்ஸ் வைரஸின் பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாக தென்கொரியா அறிவித்துள்ளது.

பட மூலாதாரம், AP
மெர்ஸினால் ஏற்படுத்தப்பட்ட அபாயம் தீர்ந்துவிட்டதாகவும், மக்கள் வழமையான நடவடிக்கைகளுக்கு திரும்ப வேண்டும் என்றும் பிரதமர் க்வாங் க்யோ ஆஹ்ன் கூறியுள்ளார்.
இருந்த போதிலும் சவுதி அரேபியாவுக்கு வெளியே உலகில் பெரும் எடுப்பில் மெர்ஸ் வைரஸ் பரவிய தென்கொரியாவில், அதனால் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையிலும் 40 வீத வீழ்ச்சி ஏற்பட்டது.
ஆரம்பக்கட்ட தவறுகளுக்கு பின்னர், நோயாளிகளை தனிமைப்படுத்தி வைப்பதே இந்த வைரஸ் பரவுவதை தடுக்கும் என்று அதிகாரிகள் உணர்ந்துகொண்டதாக தென்கொரியாவுக்கான பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.




























