வேலையை விட்டு விலகியதற்காக உடலில் காற்றேற்றப்பட்ட சிறுவன் பலி

வங்கதேசத்தில் மோட்டார் பழுது பார்க்கும் கடைகளில் சிறுவர்கள் பலர் வேலைபார்க்கின்றனர்.
படக்குறிப்பு, வங்கதேசத்தில் மோட்டார் பழுது பார்க்கும் கடைகளில் சிறுவர்கள் பலர் வேலைபார்க்கின்றனர்.
பிரசுரிக்கப்பட்டது

வங்கதேசத்தில் தனது முதலாளியால் உடலுக்குள் வேண்டுமென்றே காற்றேட்டப்பட்ட ஒரு பனிரெண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

நாட்டின் தெற்கிலுள்ள குல்னா என்ற ஊரில் இச்சம்பவம் நடந்துள்ளது.

இந்தப் பையன் தனக்கு வேறொரு இடத்தில் வேலை கிடைத்துவிட்டதாகக் கூறியதை அடுத்து அவர் இவ்வாறு தாக்கப்பட்டிருந்தார்.

முதலாளியும் வேறொருவரும் சேர்ந்துகொண்டு வலுக்கட்டாயமாக அச்சிறுவனின் உடல் துவாரம் ஒன்றினுள் வேகமாக காற்று வரும் பம்ப் மூலமாக காற்றேற்ற, உடலுறுப்புகள் பலவும் ஸ்தம்பித்துப்போய் அச்சிறுவன் உயிரிழந்தார்.

அவ்விருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் கூறுகிறது.

வங்கதேசத்தில் போன மாதம், ஒரு பதிமூன்று வயது சிறுவனை ஒரு இரும்புத் தடியால் தாக்கி சிலர் கொல்லும் வீடியோ வெளியாக அதிக மக்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் வெளியிட்டிருந்தனர்.