ஹிரோஷிமாவில் புல்பூண்டுகளையும் அழித்த அணுக்குண்டின் 70 வது ஆண்டு -காணொளி

பிரசுரிக்கப்பட்டது

உலகத்தின் முதலாவது அணுக்குண்டுத் தாக்குதல் நடந்த 70வது ஆண்டு நிறைவை அந்த தாக்குதல் நடந்த ஹிரோஷிமா நகர மக்கள் இன்று அனுட்டிக்கிறார்கள்.

அமெரிக்க விமானம் ஒன்றால் இந்த ஜப்பானிய நகரத்தின் மீது இரண்டாம் உலகப்போரின் போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதல் நடந்த நேரத்தை குறிக்கும் வகையில், சரியாக காலை 8.15 க்கும் ஒரு நிமிட மௌனம் அங்கு அனுட்டிக்கப்பட்டது.

அங்கு நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே அவர்கள், ''உலகத்தில் அணு ஆயுதங்கள் முற்றாக களையப்பட வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.

''ஹிரோஷிமா ஆண்டு நிறைவு நிகழ்வுகள் அண்மைய இரானிய அணு உடன்படிக்கையின் அவசியத்தை வலியுறுத்துகின்றன'' என்று அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஜோண் கெர்ரி கூறியுள்ளார்.

ஹிரோஷிமா குண்டு தாக்குதலின் போது உடனடியாக 70,000 மக்கள் கொல்லப்பட்டனர். அதே எண்ணிக்கையானோர் பின்னர் கதிரியக்கம் காரணமாகவும் பலியாகினர்.

3 தினங்களின் பின்னர் நாஹாசாக்கி என்னும் நகர் மீதும் இன்னுமொரு அணுக் குண்டுத்தாக்குதல் அமெரிக்காவால் நடத்தப்பட்டது.

ஹிரோஷிமா நிகழ்வுகள் குறித்த பிபிசியின் ஒரு காணொளி.