தாலிபானின் புதிய தலைவர் மன்சூருக்கு அல் கொய்தாவின் தலைவர் ஆதரவு

பிரசுரிக்கப்பட்டது

தாலிபான் இயக்கத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் மன்சூருக்கு ஆதரவளிப்பதாக அல்கொய்தாவின் தலைவர் ஆயமான் அல் ஜவாஹிரி தெரிவிக்கும் குரல் பதிவு ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

அல் கொய்தாவின் தலைவர் ஜவாஹிரி ஆதரவளித்திருப்பது தாலிபான் இயக்கத்தில் மன்சூரின் நிலையை மேலும் வலுப்படுத்தும்.
படக்குறிப்பு, அல் கொய்தாவின் தலைவர் ஜவாஹிரி ஆதரவளித்திருப்பது தாலிபான் இயக்கத்தில் மன்சூரின் நிலையை மேலும் வலுப்படுத்தும்.

தாலிபன் இயக்கத்திற்குள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகக் கடும் போட்டி நிலவும் நிலையில், ஆயமான் அல் ஜவாஹிரி மன்சூருக்கு ஆதரவளித்திருப்பது அவரது நிலையை வலுப்படுத்துவதாக அமையும் என அங்கிருக்கும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தாலிபன் அமைப்பின் தலைவராக இருந்த முல்லா ஓமரின் மரணத்தை கடந்த மாதம் ஒப்புக்கொண்ட தாலிபான் இயக்கத்தினர், தங்கள் அமைப்பின் தலைவரை தேர்ந்தெடுத்துவிட்ட்தாகவும் அறிவித்தனர்.

இதற்கிடையில், அல்கொய்தாவின் தலைவர் உயிருடன் இருக்கிறாரா என்ற சந்தேகங்களை அந்த இயக்கத்தின் எதிர்ப்பாளர்கள் எழுப்பிவந்தனர். இந்த நிலையில், சுமார் ஒருவருட இடைவெளிக்குப் பிறகு அல் ஜவாஹரியின் இந்த குரல் பதிவு வெளியிடப்பட்டிருக்கிறது.