இராக்கில் பொறுப்புக்களை கைவிட்ட தளபதிகளுக்கு எதிராக இராணுவ விசாரணை

கடந்த மே மாதத்தில் ரமாடி நகரம் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளின் வசம் வீழ்ந்தது
படக்குறிப்பு, கடந்த மே மாதத்தில் ரமாடி நகரம் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளின் வசம் வீழ்ந்தது
பிரசுரிக்கப்பட்டது

இராக்கின் ரமாடி நகரைக் கைப்பற்றிய இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளுக்கு எதிரான போரின்போது, தங்களின் பொறுப்புக்களை கைவிட்டிருந்த இராணுவத் தளபதிகளுக்கு எதிராக இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்துவதற்கு பிரதமர் ஹைதர் அல் அபாதி வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

அறிவுறுத்தல்களுக்கு புறம்பாக குறித்த தளபதிகள் தங்களின் பொறுப்புக்களை கைவிட்டுச் சென்றுள்ளதாக கூறியிருந்த விசாரணைக் கவுன்சில் ஒன்றே இந்த இராணுவ நீதிமன்ற விசாரணையை பரிந்துரை செய்திருந்தது.

இராக்கின் மேற்கே உள்ள அன்பார் மாகாணத்தின் தலைநகரான ரமாடி, ஓராண்டுக்கும் மேலாக இராக்கிய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிலிருந்தது.

கடந்த மே மாதத்தில் அந்த நகரம் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளின் வசம் வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.