போக்கோ ஹராமை ஒழிப்பதே இலக்கு:நைஜீரிய இராணுவம்

பிரசுரிக்கப்பட்டது

போக்கோ ஹராமின் தலைவர் அபுபக்கர் ஷெகாவ் தான் உயிருடன் இருப்பதாகவும் அந்த இஸ்லாமியவாதக் குழுவை தனது கட்டுப்பாட்டில் இன்னும் வைத்திருப்பதாகவும், அவர் கூறுவதாக ஒலி வடிவில் வெளிவந்த செய்தியை நைஜீரிய பாதுகாப்புபடையினர் புறந்தள்ளியுள்ளனர்.

போக்கோ ஹராமின் தலைவர் அபுபக்கர் ஷெகாவ்
படக்குறிப்பு, போக்கோ ஹராமின் தலைவர் அபுபக்கர் ஷெகாவ்

ஆனால் அவர் உயிருடன் உள்ளாரா அல்லது இறந்து விட்டாரா என்பது ஒரு பொருட்டே இல்லை என நைஜீரிய இராணுவத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

நைஜீரிய அதிபர் முஹமது புஹாரி கட்டளையிட்டபடி மூன்று மாதங்களுக்குள் இந்தக் குழுவை இல்லாது ஒழிப்பதுவே தமது பிரதான லட்சியம் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் சாட் நாட்டின் அதிபர் இத்ரிஸ் டேபி போக்கோ ஹராம் புதிய தலைவர் ஒருவரை நியமித்துள்ளதாக அறிவித்தது, அபுபக்கர் ஷெகாவ் இறந்துவிட்டார் எனும் ஊகங்களை ஏற்படுத்தியிருந்த்து.