தாக்குதலாளியின் வலையமைப்பு - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
பாங்காக் வழிபாட்டிடத்தில் இருபது பேர் பலியாகக் காரணமான, திங்களன்று நடந்த தாக்குதலின் சந்தேக நபரின் வரையப்பட்ட விபரமான படத்தை போலிஸார் வெளியிட்டிருக்கிறார்கள்.
இவர் தாய்லாந்தை சேர்ந்தவரா அல்லது வெளிநாட்டவரா என்பது தெரியவில்லை. ஆனால், அவர் தனியாக இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க முடியாது என்று போலிஸார் நம்புகிறார்கள்.
பாதுகாப்பு கமெராக்களில் தெரிந்த மேலும் இருவர், அவரது கூட்டாளிகள் என்று போலிஸார் கூறுகிறார்கள்.
சந்தேக நபர் குறித்த விபரங்களுக்கு சன்மானத்தையும் போலிஸார் அறிவித்துள்ளார்கள்.
இவை குறித்த பிபிசியின் காணொளி.