குடியேறிகள் விவகாரம்: பிரிட்டன் - ஃப்ரான்ஸ் அமைச்சர்கள் கூட்டம்

பிரசுரிக்கப்பட்டது

குடியேறிகள் விவகாரம் குறித்து விவாதிக்க, பிரிட்டன் மற்றும் ஃப்ரான்ஸ் நாடுகளின் அமைச்சர்கள் காலே நகரில் இன்று கூடுகின்றனர்.

காலே வழியாக சுமார் 4,000 குடியேறிகள் உட்புக முயற்சிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, காலே வழியாக சுமார் 4,000 குடியேறிகள் உட்புக முயற்சிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பிரிட்டனை அடைய முயற்சிக்கும் குடியேறிகள், காலே சுரங்கத்தின் வழியாக வரும் வாகனங்களில் மறைந்து பிரிட்டனுக்குள் நுழைவது தொடர்ந்து வருகிறது.

பிரான்ஸ் வடபகுதியில் இப்படி குடியேறிகளை கடத்தும் நெட்வொர்க்கை கட்டுப்படுத்துவதற்கான மத்திய நிலையமொன்றை இரு நாடுகளும் சேர்ந்து அமைக்கவிருக்கின்றன.

மேலும், பிரெஞ்சு காவல்துறையினரின் ரோந்து நடவடிக்கையை அதிகரிப்பதற்கான ஒப்பந்தமொன்றிலும் இரு நாடுகளின் அமைச்சர்கள் கையெழுத்திடவுள்ளனர்.

காலே வழியாக, சுமார் நான்காயிரம் குடியேறிகள் பிரிட்டனுக்குள் நுழைய முயற்சித்து வருகின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.