பாங்காக் குண்டு வெடிப்பு; சந்தேகநபர் கைது

பட மூலாதாரம், ROYAL THAI POLICE
பிரசுரிக்கப்பட்டது
பாங்காக் நகரில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக, சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக தாய்லாந்து காவல்துறையினர் கூறியுள்ளனர்.
நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றை சோதனையிட்ட அதிகாரிகள், குண்டு தயாரிக்க பயன்படக்கூடிய கருவி ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.
தாங்கள் 'தேடிவந்த நபரை ஒத்தவராக' குறித்த சந்தேகநபர் இருப்பதாக காவல்துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மத்திய பாங்காக்கில் உள்ள இராவன கோயிலில் நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் அனேகமானோர் சுற்றுலாப் பயணிகள்.




























