குடியேறிகள் நெருக்கடி: ஹங்கேரி நாடாளுமன்றத்தில் விவாதம்

பட மூலாதாரம், z
ஏற்கனவே ஆயிரக்கணக்கான குடியேறிகள் மற்றும் அகதிகள் ஹங்கேரிக்கு வந்தடைந்துள்ள நிலையில் மேலும் அகதிகள் தம் நாட்டுக்குள் வருவதைத் தடுக்கும் புதிய நடவடிக்கைகளை முன்னெடுப்பக்கும் நோக்கிலான அந்நாட்டு அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து இன்று வெள்ளிக்கிழமை ஹங்கேரியின் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுவருகிறது.
நாட்டின் தெற்கு எல்லையில் புதிய முகாம்கள் அமைப்பது, ஹங்கேரிக்குள் நுழைவதற்கு கடுமையான கட்டுபாடுகளை விதிப்பது ஆகிய யோசனைகள் இந்த புதிய திட்டத்தில் அடங்கும்.
நாடாளுமன்றத்தில் வலதுசாரி அரசாங்கத்திற்கு ஒரு வலுவான பெரும்பான்மை இருப்பதால், இந்தத் திட்டங்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Reuters
இதனிடையே ஆஸ்திரியா மற்றும் ஜெர்மனியைச் சென்றடைய முயலும் நூற்றுக்கணக்கான மக்கள், பூடபெஸ்ட்டின் மேற்கில் ஒரு ரயிலில் சிக்கியுள்ளனர்.
அவர்களை அருகில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் எண்ணுகின்றனர்.
வட மற்றும் மேற்கு ஐரோப்பாவுக்கு செல்லும் குடியேறிகளின் தரைவழிப் பாதையில் தான் ஹங்கேரி அமைந்துள்ளது.




























