மீண்டும் இபோலா அச்சம்; சியேரா லியோனில் தனிமைப் படுத்தப்பட்ட கிராமம்

இபோலா கொள்ளை நோயிலிருந்து சியேரா லியோன் முற்றாக விடுபட்டுவிட்டதாக அறிவிக்கப்பட இருந்த நிலையில் பெண் ஒருவர் அந்த வைரஸுக்கு பலியாகியுள்ளார் (கோப்புப் படம்)
படக்குறிப்பு, இபோலா கொள்ளை நோயிலிருந்து சியேரா லியோன் முற்றாக விடுபட்டுவிட்டதாக அறிவிக்கப்பட இருந்த நிலையில் பெண் ஒருவர் அந்த வைரஸுக்கு பலியாகியுள்ளார் (கோப்புப் படம்)
பிரசுரிக்கப்பட்டது

சியேரா லியோனில் இபோலா வைரஸ் தொற்றியிருப்பதாக உறுதிசெய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அங்கு கிட்டத்தட்ட 1000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கில் உள்ள கிராமம் ஒன்றில் மூன்று வாரங்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கையின்படி, ஊரில் உள்ள மக்கள் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு போக முடியாத வகையில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சியேரா லியோன், இபோலா வைரஸிலிருந்து முழுமையாக விடுதலை பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இபோலா வைரஸுக்கு குறித்த பெண் பலியாகியிருந்தார்.

சியேரா லியோன், கினி மற்றும் லைபீரியா ஆகிய நாடுகளில் இபோலா நோய்த் தொற்றுக்கு இதுவரை சுமார் 11 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.