'ஃபுக்குஷிமா அணு ஆலையை அண்டிய நகரில் மக்கள் சென்று வாழலாம்'

4 ஆண்டுகளுக்கு முன்னர் ஃபுக்குஷிமா அணு ஆலை சுனாமியால் சேதமடைந்ததை தொடர்ந்து கதிர்வீச்சு அச்சத்தால் அப்பகுதியிலுள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர்
படக்குறிப்பு, 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஃபுக்குஷிமா அணு ஆலை சுனாமியால் சேதமடைந்ததை தொடர்ந்து கதிர்வீச்சு அச்சத்தால் அப்பகுதியிலுள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர்
பிரசுரிக்கப்பட்டது

ஜப்பானில் ஃபுக்குஷிமா அணு ஆலைக்கு அருகே உள்ள நகரம் ஒன்றில் கதிர்வீச்சு ஆபத்து இல்லை என்றும் அங்கு மக்கள் மீண்டும் சென்று வாழலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நிலநடுக்கம் ஒன்றைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி காரணமாக ஃபுக்குஷிமா அணுமின் ஆலையில் இருந்த அணுஉலைகள் உருகத் தொடங்கின.

அதனையடுத்து, அருகில் இருந்த நாராஹா என்ற இந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

மக்கள் மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்புவதை ஊக்குவிப்பதற்காக, கதிர்வீச்சின் அளவை பரிசோதிக்கும் கருவிகளை அதிகாரிகள் மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

கடைகள், சிகிச்சை நிலையங்கள் உள்ளிட்ட உள்ளூர் வசதிகளையும் அதிகாரிகள் மீள அமைத்துவருகின்றனர்.

இங்கிருந்த மக்கள் தங்களின் சொந்த வீடுகளுக்கு சென்று கொஞ்சக் காலம் தங்கிவருவதற்கு கடந்த ஏப்ரல் மாதம் முதலே அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.

ஆனால், வெறும் 10 வீதமானவர்கள் தான் இவ்வாறு போய் தங்கிவருவதற்கு இதுவரை விண்ணப்பித்துள்ளனர்.