மலேசியாவில் மூழ்கிய படகில் இருந்து 61 சடலங்கள் மீட்பு
பிரசுரிக்கப்பட்டது
மலேசியாவில் வியாழனன்று கடலில் மூழ்கிய மரப் படகில் இருந்து 61 சடலங்களை மீட்டதாக மலேசிய கடற்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் படகு இந்தோனேசிய பணியாளர்களை அவர்களது நாட்டுக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த வேளையில், அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றியிருந்ததால் கடலில் மூழ்கியிருக்கலாம் என்றும் அவர்கள் கூறினார்கள்.
மலாக்கா நீரிணைப் பகுதியில் கடுமையான கடற்பகுதியில் அது மூழ்கியுள்ளது.
சுமார் 20 பேர் மாத்திரம் மீட்கப்பட்டனர்.
பெரும்பாலும் சட்டவிரோதக் குடியேறிகளாக 20 லட்சம் இந்தோனேசியர்கள் மலேசியாவில் வேலை செய்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.




























