பால்வெளி மண்டலத்தின் புகைப்படங்கள்

பிரசுரிக்கப்பட்டது

பால்வெளி மண்டலத்தை புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்ட புகைப்படக் கலைஞரான ஸ்டீஃபன் இபோலிடோவின் சில புகைப்படங்கள். அவர் எடுத்த ஒரு புகைப்படத்தில் எதிர்பாராதவிதமாக கடல் நாய் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

புகைப்படக் கலைஞரான ஸ்டீஃபன் இபோலிடோ பால்வெளி மண்டலத்தைப் படம்பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர். அவர் எடுத்த பால்வெளி மண்டலத்தின் புகைப்படம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக கடல் நாய் ஒன்றும் இருந்தது. இங்கே இருக்கும் புகைப்படத்தில் பால்வெளி மண்டலமும் கடல் நாயும் தனித்தனியாக எடுக்கப்பட்டு ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
படக்குறிப்பு, புகைப்படக் கலைஞரான ஸ்டீஃபன் இபோலிடோ பால்வெளி மண்டலத்தைப் படம்பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர். அவர் எடுத்த பால்வெளி மண்டலத்தின் புகைப்படம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக கடல் நாய் ஒன்றும் இருந்தது. இங்கே இருக்கும் புகைப்படத்தில் பால்வெளி மண்டலமும் கடல் நாயும் தனித்தனியாக எடுக்கப்பட்டு ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
அமெரிக்காவின் பல இடங்களில் இருந்து இப்போலிட்டோ பால்வெளி மண்டலத்தை புகைப்படம் எடுத்திருக்கிறார். இந்தப் புகைப்படம் அரிசோனாவின் செடொனாவில் கதீட்ரல் ராக்கிலிருந்து எடுக்கப்பட்டது.
படக்குறிப்பு, அமெரிக்காவின் பல இடங்களில் இருந்து இப்போலிட்டோ பால்வெளி மண்டலத்தை புகைப்படம் எடுத்திருக்கிறார். இந்தப் புகைப்படம் அரிசோனாவின் செடொனாவில் கதீட்ரல் ராக்கிலிருந்து எடுக்கப்பட்டது.
பால்வெளி மண்டலம் என்பது கம்பிச் சுருளைப் போல சுழன்ற வடிவத்தில் இருக்கும் கிரக மண்டலமாகும். நட்சத்திரங்கள், வாயுக்கள், தூசிகளால் ஆன இந்த மண்டலம், தன் மைய அச்சிலிருந்து சுழல்கிறது. மேஜிக்கல் ட்ரீ என்ற இந்தப் படம் உடாவில் உள்ள ஆர்சஸ் நேஷனல் பார்க்கில் எடுக்கப்பட்டது.
படக்குறிப்பு, பால்வெளி மண்டலம் என்பது கம்பிச் சுருளைப் போல சுழன்ற வடிவத்தில் இருக்கும் கிரக மண்டலமாகும். நட்சத்திரங்கள், வாயுக்கள், தூசிகளால் ஆன இந்த மண்டலம், தன் மைய அச்சிலிருந்து சுழல்கிறது. மேஜிக்கல் ட்ரீ என்ற இந்தப் படம் உடாவில் உள்ள ஆர்சஸ் நேஷனல் பார்க்கில் எடுக்கப்பட்டது.
அரிசோனாவின் செடோனாவில் பெல் ராக்கில் 30 வினாடி எக்ஸ்போஷரைப் பயன்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டது. தொடர்ந்து நீடித்த மின்னல்கள் வானத்தை வெளிச்சமாக்கியிருக்கின்றன.
படக்குறிப்பு, அரிசோனாவின் செடோனாவில் பெல் ராக்கில் 30 வினாடி எக்ஸ்போஷரைப் பயன்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டது. தொடர்ந்து நீடித்த மின்னல்கள் வானத்தை வெளிச்சமாக்கியிருக்கின்றன.
வெர்மோன்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு இப்போலிட்டோ 30 வினாடி எக்ஸ்போஷரைப் பயன்படுத்தினார். பாலத்தின் மீது ஃப்ளாஷ் வெளிச்சத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்.
படக்குறிப்பு, வெர்மோன்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு இப்போலிட்டோ 30 வினாடி எக்ஸ்போஷரைப் பயன்படுத்தினார். பாலத்தின் மீது ஃப்ளாஷ் வெளிச்சத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்.
கலிஃபோர்னியாவின் ஜோஷுவா ட்ரீ நேஷனல் பார்க்கில் இருக்கும் ஆர்க் ராக். சுமார் 3,100 சதுர மைல் பரப்பளவுக்கு விரிந்து பரந்திருக்கும் இந்த தேசியப் பூங்காவுக்கு வருடத்திற்கு பத்து லட்சம் பார்வையாளர்கள் வருகிறார்கள்.
படக்குறிப்பு, கலிஃபோர்னியாவின் ஜோஷுவா ட்ரீ நேஷனல் பார்க்கில் இருக்கும் ஆர்க் ராக். சுமார் 3,100 சதுர மைல் பரப்பளவுக்கு விரிந்து பரந்திருக்கும் இந்த தேசியப் பூங்காவுக்கு வருடத்திற்கு பத்து லட்சம் பார்வையாளர்கள் வருகிறார்கள்.
மெய்ன் கடற்கரையில் உள்ள மார்ஷால் பாயிண்ட் கலங்கரைவிளக்கம். கலங்கரை விளக்கத்தின் வெளிச்சத்தையும் தாண்டி நட்சத்திரங்கள் தென்படுகின்றன.
படக்குறிப்பு, மெய்ன் கடற்கரையில் உள்ள மார்ஷால் பாயிண்ட் கலங்கரைவிளக்கம். கலங்கரை விளக்கத்தின் வெளிச்சத்தையும் தாண்டி நட்சத்திரங்கள் தென்படுகின்றன.
இதுவும் மார்ஷால் பாயிண்ட் கலங்கரை விளக்கத்தில் எடுக்கப்பட்டதுதான். ஆனால், 11 தனித்தனிப் புகைப்படங்கள் இதில் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கின்றன.
படக்குறிப்பு, இதுவும் மார்ஷால் பாயிண்ட் கலங்கரை விளக்கத்தில் எடுக்கப்பட்டதுதான். ஆனால், 11 தனித்தனிப் புகைப்படங்கள் இதில் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கின்றன.
காப்லின் வேலி மாகாணப் பூங்காவில் எடுக்கப்பட்ட இரண்டு படங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு படத்தில் புகைப்படக் கலைஞர் தனது டார்ச் விளக்கைப் பயன்படுத்தியிருக்கிறார். மற்றொரு படத்தில் சூழலின் வெளிச்சம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
படக்குறிப்பு, காப்லின் வேலி மாகாணப் பூங்காவில் எடுக்கப்பட்ட இரண்டு படங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு படத்தில் புகைப்படக் கலைஞர் தனது டார்ச் விளக்கைப் பயன்படுத்தியிருக்கிறார். மற்றொரு படத்தில் சூழலின் வெளிச்சம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.