'துஷ்பிரயோகத்தை மறைக்க முயன்ற' ஆயர்கள் மீது விமர்சனம்

பட மூலாதாரம், AP
பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர் என்று நன்கு அறியப்பட்ட ஒருவரை மெளனிக்க முயன்றதாகக் கூறப்படும் சிலி நாட்டைச் சேர்ந்த இரண்டு கர்தினால்களின் (cardinal) நடவடிக்கைகளால் விசனம் அடைந்துள்ளதாக பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பாப்பரசரால் உருவாக்கப்பட்டுள்ள ஆணையத்தின் ஸ்தாபக உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
சிலியின் தலைநகர் சந்தியாகோவின் தற்போதைய பேராயரும் அவருக்கு முன்னர் அந்தப் பொறுப்பில் இருந்தவரும், 'பொய்களை பரப்புவதை தடுக்க வேண்டும்' என்று எழுதியுள்ள மின்னஞ்சல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே மாரி கொலின்ஸ்-இன் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.
சிலியில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான யுவான் கார்லோஸ் குருஸ் என்பவரை குறிப்பிட்ட அந்த மின்னஞ்சல்கள் எழுதப்பட்டுள்ளன.
ஆங்கிலம் பேசும் ஆயர்களின் கூட்டத்தில் உரையாற்றுமாறு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
பாப்பரசரின் ஆணையத்தில் அவரை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று கொலின்ஸ் கேட்டுக் கொண்டிருந்தார்.




























