ஆப்கானிஸ்தான்: சிறைக்குள் நுழைந்த தாலிபன்கள் 350 கைதிகளை விடுவித்தனர்

பிரசுரிக்கப்பட்டது
ஆப்கானிஸ்தானில் மத்திய பிராந்திய நகரான காஸ்னியில் உள்ள சிறைச்சாலை ஒன்றுக்குள் தாக்குதல் நடத்தி அதிரடியாக நுழைந்துள்ள தாலிபன் ஆயுததாரிகள் குறைந்தது 350 கைதிகளை விடுவித்துச் சென்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.
சிறைச்சாலை கதவுகளுக்கு முன்னால் தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆயுததாரி ஒருவர், ஏனைய ஆயுததாரிகள் உள்ளே நுழைவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
பாதுகாப்புப் படைத் தரப்பில் நால்வரும் மூன்று ஆயுததாரிகளும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டதாக காஸ்னி மாகாணத்தின் துணை ஆளுநர் தெரிவித்தார்.
2011-ம் ஆண்டில் கந்தஹார் சிறைச்சாலை உடைப்பு சம்பவத்துக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் கைதிகள் தப்பியுள்ள மிகப்பெரிய சம்பவம் இதுதான்.




























