வடகொரிய அணு ஆலை செயற்படத் தொடங்கியது

பிரசுரிக்கப்பட்டது

வடகொரியா தனது யொங்பியொன் அணு உலையை செயற்படுத்த தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

வடகொரிய அணு ஆயுத ஆலை செயற்படத் தொடங்கியது
படக்குறிப்பு, வடகொரிய அணு ஆயுத ஆலை செயற்படத் தொடங்கியது

தனது அணு ஆயுதங்களை மேம்படுத்தி, அவற்றை எந்த நேரத்திலும் அமெரிக்காவுக்கு எதிராக பயன்படுத்த தயாராவதாக வடகொரியா கூறுகிறது.

அந்த அணு ஆலைப் பகுதியில் நடமாட்டமும் செயற்பாடுகளும் அதிகரித்திருப்பதை கடந்த வாரம் வெளியான செய்மதிப் படங்கள் காண்பித்தன.

நீண்ட தூர ராக்கட்டுக்களை ஏவும் வல்லமையை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கை என்று ஏனையோரால் பார்க்கப்படும் வகையில், தொடர்ச்சியாக பல செய்மதிகளை தாம் ஏவப்போவதாக வடகொரியா அறிவித்த மறுதினம் இந்த அறிவிப்பும் வந்திருக்கிறது.

இந்த இரு அறிவிப்புக்களும், வடகொரியாவின் இராணுவ வல்லமையை உலகுக்கு நினைவூட்டும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டவை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.