''ஹப்பி பேர்த்டே ...'' பாடலுக்கு காப்புரிமக் கட்டுப்பாடு கிடையாது
''ஹப்பி பேர்த்டே டூ யூ'' என்ற ஆங்கில மொழியின் மிகவும் பிரபலமான பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் வரிகளை இனி எவரும் காப்புரிமத்தால் தடுத்து வைக்க முடியாது என்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டிருக்கிறது.

இன்னுமொரு நிறுவனத்திடம் இருந்து இந்தப் பாடலை தாம் 1998இல் வாங்கியதாக வார்னர் சப்பல் மியூசிக் நிறுவனம் வாதிடுகிறது.
ஆனால், அந்தப் பாடலை பியானோவில் வாசிக்கும் ஒரு குறிப்பிட்ட முறையை மாத்திரமே வார்னர் சாப்பல் நிறுவனம் தமது சொந்த உரிமமாக வைத்திருக்க முடியும் என்று ஒரு ஆவணப்பட தயாரிப்பாளர் வாதிடுகிறார்.
இந்த ''ஹப்பி பேர்த்டே...'' பாடலுக்காக வார்னர் சாப்பல் நிறுவனம் இப்போது வருடத்துக்கு 20 லட்சம் டாலர்களை பெற்றுவருகிறது.
இந்தப் பாடல் 1893இல் அமெரிக்க சகோதரிகளான மில்ட்ரெட் ஹில் மற்றும் பட்டி ஹில் ஆகியோரால் எழுதப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால், அது '' குட் மோர்னிங் டு ஆல்'' (''அனைவருக்கு காலை வணக்கம்'') என்ற வரிகளுடன் எழுதப்பட்டுள்ளது.




























